அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

OneFuture யாருக்காக?

OneFuture என்பது சுவிச்சர்லாந்திற்கு புதிதாய் வரும், உதவி தேவைப்படும் ஒவ்வொருவருக்குமானது. நீங்கள் அகதி, புலம் பெயர்ந்தவர் அல்லது ஆவணமற்றவர் என்று எந்த பிரிவை” சேர்ந்தவராயினும் அது எங்களுக்கு தேவையில்லை. உங்களுக்கு உதவி தேவையெனில், எங்கள் சமூகத்தை அணுக  தயங்காதீர்கள்.”

ஒரேஎதிர்காலத்திலிருந்து நான் எத்தகைய உதவிகளை பெறமுடியும்?

OneFuture என்பது உதவ எண்ணும் ஒரு மக்கள் சமூகம். ஒவ்வொரு நபரும் அவர்களுக்கு முடிந்த/விரும்பும் வழியில் உதவுவர். ஒரு சமூகமாக எங்களின் சலுகை பரந்த இலக்கைக்கொண்டது; நமது மொழி உதவிமூலம் சுவிஸ் சட்ட அமைப்புடன் இணங்க உதவுவது. சமூக சந்திப்புகளுக்கு, இங்கே உள்ளூர்வாசிகளும் இருக்கிறார்கள். தேவைப்படும் எத்தகைய உதவியையும் செய்ய நாங்கள் வெளிப்படையாய் இருக்கிறோம்.

ஒரு உதவியாளரோடு நான் எவ்வாறு தொடர்புகொள்வது?

எங்களது மேடைகொண்டு, இங்கிருக்கும் அனைத்து உதவியாளர்களையும் நீங்கள் காணலாம், உங்களின் தேவைக்கேற்ப, உங்களுக்கு பொருந்துவோரை நீங்களே தேர்வு செய்துகொள்ளலாம். அவன் அல்லது அவளது சுயவிவரத்தில் ஒரு கிளிக் செய்து, அவர்களுடன் உரையாடலை துவங்குங்கள்.

இதற்கு ஏதேனும் கட்டணம் உட்படுத்தப்பட்டுள்ளதா?

எந்த நேரத்திலும் கட்டாயமாக கட்டணம் கிடையாது.

நான் எவ்வாறு உதவியாளர் ஆவது? அவ்வாறு இருப்பது என்றால் என்ன?

இணையத்தளத்திலுள்ள நமது பதிவு படிவத்தை நிரப்பிவிட்டு (அதற்கு ஒரு 3நிமிடங்கள்தான் எடுக்கும்), அப்போதே துவங்கலாம்! எந்த பொறுப்பு அல்லது ஆரம்ப முயற்சியோ இதற்கு தேவையில்லை: மக்களுக்கு உதவி தேவைப்பட்டால் அவர்கள் உங்களை தொடர்புகொள்ளலாம் என்பதை மட்டும் குறிப்பிடுங்கள்.

நாங்கள் எங்கே சந்தித்துக்கொள்ளவேண்டும்?

நான் உங்களிடம், பொதுஇடத்தில் சந்திப்பைதையே அறிவுறுத்துகிறோம், அதாவது எப்போதுமே உதவியாளர்கள் அல்லது மாணவர்கள் இடம் அல்லது நீங்கள் பாதுகாப்பாய் உணராத எந்த இடத்திற்கும் சந்திக்காதீர்கள். எடுத்துக்காட்டாக, ஒரு நட்பான காபி அருந்தகம், ஒரு நூலகம், பல்கலைக்கழகம் அல்லது நமது கூட்டாளி ஒருவன் பப் போன்ற இடங்களில் சந்தியுங்கள் (வளங்கள் → சந்திக்குமிடங்கள்).

ஏதேனும் பிரச்னையின்போது நான் எவ்வாறு ஒருவரை தொடர்புகொள்வது?

உங்களுக்கு ஏதேனும் அவசரமெனில், காவல்துறை (117), ஆம்புலன்ஸ் (144) அல்லது தீயணைப்பு துறை (118) போன்றவைகளை, உங்கள் விஷயத்திற்கு தொடர்பானவரை அழையுங்கள். நீங்கள் சந்திக்கும் இடத்தில ஏதேனும் கேள்வி அல்லது தெளிவற்ற நிலை ஏற்பட்டால், தயவுசெய்து உடனே எங்களுக்கு தெரியப்படுத்தவும்.

என்னிடம் ஒரு உதவியாளர் சுயவிவரம் உள்ளது, ஆனால் நான் தற்போது விடுமுறையிலோ/நேரமில்லாமலோ இருந்தால் என்ன செய்வது?

நீங்கள் உங்கள் சுயவிவரத்தை நீக்க தேவையில்லை, உங்களது நிலையை வரவில்லை என்று போட்டிடுங்கள், பின்னர் எப்போது வேண்டுமானாலும் அதை மீண்டும் செயலாக்கம் செய்யலாம்.

உதவியாளர்களின் சுயவிவரங்கள் உறுதி செய்யப்பட்டனவா?

உருவாகும் ஒவ்வொரு சுயவிவரத்தையும் எங்கள் அணி பார்த்துக்கொண்டுதான் இருக்கும். அவற்றில் ஒரு நபரின் ஒருமைப்பாடு குறித்து ஏதேனும் சந்தேகம் இருப்பின், அந்த புது சுயவிவர சொந்தக்காரர் எங்கள் அணி உறுப்பினரால் தொடர்புகொள்ளப்படுவார். சரிபார்த்தலுக்காக நாங்கள் முடிந்தவரை எங்களின் சிறந்தவற்றை வழங்குகிறோம், இந்த செயல்பாட்டை வருங்காலத்தில் மேலும் இட்டுச்செல்ல, பல அம்சங்களை இணைக்கவுள்ளோம்.

நான் எவ்வாறு மைய அணியில் இணைவது?

நீங்கள் உதவவும், இலாப நோக்கற்ற அமைப்பொன்றில் ஒரு பகுதியாய் இருக்க எண்ணினாலும், உங்களது விவரங்களை info@onefuture.ch என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.

என்னிடம் OneFuture குறித்து சிறப்பான யோசனை இருந்தால்?

நாங்கள் அனைத்து உள்ளீடுகள், யோசனைகள், மற்றும் சாத்தியமான கூட்டுப்பணிகளில் ஆர்வமாய் இருக்கிறோம். நாங்கள் ஒரேஎதிர்காலத்தை ஒரு பெரிய வெளிப்படையான சமூகமாக எண்ணுகிறோம், எனவே உங்கள் மனதிலிருப்பதை எங்களுக்கு தெரிவியுங்கள்!

என்னிடம் மேலும் கேள்விகள் இருந்தால் என்ன செய்வது?

உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், நீங்கள் ‘பற்றி’ பிரிவிலிருக்கும் தொடர்பு படிவத்தை பயன்படுத்தலாம் அல்லது info@onefuture.ch என்ற முகவரிக்கு எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். எங்கள் குழு உறுப்பினர்களை நீங்கள் நேரடியாகவும் தொடர்புகொள்ளலாம்.